இந்தியா
அந்தமான் நிகோபார் தீவில் நிலநடுக்கம்
- அந்தமான் நிகோபார் தீவு போர்ட்பிளேயரில் இருந்து சுமார் 183 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போர்ட்பிளேயர்:
அந்தமான் நிகோபார் தீவு போர்ட்பிளேயரில் இருந்து சுமார் 183 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியது.
ரிக்டர் அளவுகோலில் இது 4.3 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.