உலகம்

இஸ்ரேல் மீது தடைகளை விதிக்க முடியாததால் பதவியை தூக்கி எறிந்த நெதர்லாந்து அமைச்சர்!

Published On 2025-08-23 17:09 IST   |   Update On 2025-08-23 21:57:00 IST
  • இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்களுக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யவும் காஸ்பர் முன்மொழிந்தார்.
  • காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளனர்.

காசாவை ஆக்கிரமித்ததற்காக இஸ்ரேலுக்கு எதிராக தடைகளை விதித்து நடவடிக்கை எடுக்க முடியாததால் நெதர்லாந்து நாட்டு வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பெசல் ஸ்மோட்ரிச் மற்றும் இடாமர் பென்-கிர் போன்ற தீவிர வலதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றும் இஸ்ரேலிய அமைச்சர்கள் டச்சு நாட்டுக்குள் நுழைவதையும், இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்களுக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யவும் காஸ்பர் முன்மொழிந்தார்.

இருப்பினும், அமைச்சரவையில் எதிர்ப்பு காரணமாக இது நடக்கவில்லை. இதனால் காஸ்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

வெளியுறவு அமைச்சர் ராஜினாமாவைத் தொடர்ந்து, சமூக ஒப்பந்த அமைச்சர் மற்றும் அரசு செயலாளர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.  

முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) காசாவில் பஞ்சம் நிலவுவதாக அறிவித்தது. காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளதாகக் அதன் அறிக்கை கூறியது.   

Tags:    

Similar News