கையில் குழந்தையுடன் சாகசம் செய்யும் பெண்- வைரலாகும் வீடியோ
- பாட்டிலில் தீப்பற்ற வைத்து அதையும் சுழலவிட்டு பிடிக்கிறார்.
- வீடியோவை இன்ஸ்டாகிராமில் 45 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டு உள்ளனர்.
தாயான பெண்மணிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு, குடும்பச் சுழலில் மூழ்கிப்போவார்கள். வெகுசிலரே வெளிப்பட்டு சாதனைப் பெண்மணிகளாக மிளிர்கிறார்கள்.
அப்படியொரு சாதனை தாய், இப்போது வலைத்தளங்களில் அதிகம் வைரலாகிறார். அவர் கையில் தனது 2 வயது குழந்தையை வைத்திருக்கிறார். மற்றொரு கையில் 2 பாட்டில்களை வைத்து மேலே சுழலவிட்டு பிடித்து சாகசம் செய்கிறார். அதேபோல பாட்டிலில் தீப்பற்ற வைத்து அதையும் சுழலவிட்டு பிடிக்கிறார். இந்த சாகசத்தில் ஈடுபடும்போது அவர் புடவையே கட்டியிருக்கிறார். அந்த சாதனைப் பெண்மணி புனே நகரை சேர்ந்த கவிதா மேதார் என்று தெரியவந்தது. அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
அவர் சாகசம் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் 45 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டு உள்ளனர். 23 லட்சம் பேர் விருப்பப் பொத்தானை அழுத்தி ஆதரவு தெரிவித்து உள்ளனர்.