இந்தியா

SIR: ராஜஸ்தானில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு.. 42 லட்சம் மக்கள் நீக்கம்

Published On 2025-12-16 23:36 IST   |   Update On 2025-12-16 23:36:00 IST
  • ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளிலும் வரைவு பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
  • மேற்குவங்க வரைவு வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.

பீகாரை தொடர்ந்து 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 11 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளிலும் வரைவு பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

இதில் ராஜஸ்தானில் வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 42 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி நவீன் மஹாஜன் கூறுகையில், " ராஜஸ்தானில் 5.46 கோடி வாக்காளர்களில் 41.79 லட்சம் வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்படவில்லை. இதனையடுத்து, அந்தப் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன.

அவர்களில், 8.75 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள், 29.6 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள், 3.44 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்களைப் பதிவு செய்தவர்கள்" என்று தெரிவித்தார்.

அதேவேளை நேற்று வெளியிடப்பட்ட மேற்குவங்க வரைவு வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.

அதில், 24.17 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர் என்றும் 19.88 லட்சம் வாக்காளர்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர் என்றும் 12.20 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போகியுள்ளனர் என்றும் 1.38 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News