இந்தியா
BSF வீரர்களுக்கு அனுப்பபட்ட மோசமான ரெயில் - 4 ரயில்வே உயரதிகாரிகள் சஸ்பெண்ட்
- ரெயில் 72 மணி நேரம் தாமதமாக வந்ததால் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிருப்தி
- ரெயில் பெட்டிகளில் துர்நாற்றம் வீசும் கழிவறைகள் இருந்த வீடியோ இணையத்தில் வைரலானது
அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு வீரர்களை ஏற்றிச் சென்ற ரெயில் 72 மணி நேரம் தாமதமானதால், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும் ரெயில் பெட்டிகளில் துர்நாற்றம் வீசும் கழிவறைகள், கிழிந்த இருக்கைகள், மேற்கூரை மற்றும் உடைந்த கதவு, ஜன்னல்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
BSF படையினருக்கு சிறப்பு ரெயில் என்ற பெயரில் மிக மோசமான நிலையில் உள்ள ரெயிலை அனுப்பியதற்கு, 4 ரயில்வே உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்காக BSF அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.