டெல்லி சட்டசபை தேர்தல்- இன்று பிற்பகலில் தேதி அறிவிப்பு
- வரும் பிப்ரவரி மாதத்துடன் ஆம் ஆத்மி ஆட்சிக் காலம் முடிவடைய இருக்கிறது.
- பாஜக 29 பேர் கொண்டமுதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதிஷி தற்போது முதல்வராக உள்ளார்.
இதையடுத்து வரும் பிப்ரவரி மாதத்துடன் ஆம் ஆத்மி ஆட்சிக் காலம் முடிவடைய இருக்கிறது. அதற்கு முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தேர்தல் தேதி அறிவிப்பு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதோடு, 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, கவர்ச்சிகரமான திட்டங்களையும் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலையும், பாஜக 29 பேர் கொண்டமுதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்ல சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.