போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருந்த மாடு- வீடியோ
- வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்லும் நிலையில், மாட்டின் செயல் பயனர்களை கவர்ந்துள்ளது.
- வீடியோ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 700-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
நகரப்பகுதிகளில் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து இடையூறு ஏற்படுத்துவதோடு, பொது மக்கள், வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் புனேவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலையில் மாடு ஒன்று போக்குவரத்து சிக்னலில் பச்சை விளக்கு சிக்னலுக்காக பொறுமையாக காத்து நிற்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
புனே போக்குவரத்து போலீசார் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், போக்குவரத்து சிக்னல் சிவப்பு நிறத்தில் இருப்பதையும், இதைப்பார்த்த மாடு, சிக்னல் பச்சை நிறமாக மாறும் வரை பொறுமையாக காத்து நிற்பது போன்றும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 700-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்லும் நிலையில், மாட்டின் இந்த செயல் பயனர்களை கவர்ந்துள்ளது.