இந்தியா

மம்தா பானர்ஜியுடன் இன்னும் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது: மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை

Published On 2024-03-11 13:58 IST   |   Update On 2024-03-11 15:40:00 IST
  • கூட்டணிக்கான எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்தே உள்ளன.
  • வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி வரையில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளுக்கான வேட்பளர்களை வெளியிட்டார்.

மம்தாவின் இந்த அதிரடியான அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டார்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜியுடன் இன்னும் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கூட்டணிக்கான எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்தே உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி வரையில் எப்போது வேண்டுமானாலும் திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-

இந்தியா கூட்டணியில் இருந்தால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யை பிரதமர் மோடி வீட்டுக்கு அனுப்புவார் என்று மம்தா பானர்ஜி பயப்படுகிறார். எனவே பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு செய்தியை அனுப்பி உள்ளார். என் மீது அதிருப்தி அடைய வேண்டாம். நான் பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணியில் நிற்கவில்லை என்பதுதான் அந்த செய்தியாகும்.

இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்திரி விமர்சனம் செய்துள்ளார்.

Tags:    

Similar News