இந்தியா
அண்டை நாட்டுடன் இந்தியர்கள் தோளோடு தோள் நிற்கிறார்கள்- காங்கிரஸ் தலைவர் கார்கே
- 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 140 பேர் உயிரிழப்பு.
- நேபாளத்தில் நிலநடுக்கத்தால் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததால் வேதனை.
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நெருக்கடியான நேரத்தில், இந்தியர்கள் அண்டை நாட்டோடு தோளோடு தோள் நிற்கிறார்கள் என்று கூறினார்.
நேபாளத்தில் நேற்று நள்ளிரவுக்கு முன்னதாக 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 140 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
நிலநடுக்கம் குறித்து எக்ஸ் தளத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில்," நேபாளத்தில் நிலநடுக்கத்தால் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததால் வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்.
இந்த நெருக்கடியான நேரத்தில், இந்தியர்கள் நேபாளத்துடன் தோளோடு தோள் நிற்கிறார்கள்" என்றார்.