இந்தியா

கணவன் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த மனைவி பட்டப்பகலில் சுட்டுக் கொலை.. டெல்லியில் பயங்கரம்

Published On 2026-01-11 13:25 IST   |   Update On 2026-01-11 13:25:00 IST
  • கடந்த 2023-ம் ஆண்டு, ரச்சனாவின் கண் முன்னாலேயே அவரின் கணவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • ரச்சனா யாதவ் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றபோது, பைக்கில் வந்த இருவர் ரச்சனாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர்.

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்தவர் 44 வயதான ரச்சனா யாதவ். இவர் ஷாலிமார் பாக் நலச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த 2023-ம் ஆண்டு, ரச்சனாவின் கணவர் விஜயேந்திர யாதவ், ரச்சனா கண் முன்னாலேயே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் ரச்சனா தான் முக்கிய சாட்சி ஆவார்.

இந்த வழக்கில் 5 பேர் மீது குற்றவாளிகளாக கண்டறியப்பட்டனர். 

இந்நிலையில் நேற்று காலை ஷாலிமார் பாக் பகுதியில், ரச்சனா யாதவ் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றபோது, பைக்கில் வந்த இருவர்  ரச்சனாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். ரச்சனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

கணவர் கொலை வழக்கில் ரச்சனா சாட்சி சொல்வதைத் தடுப்பதற்காகவே, அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளே இவரையும் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் பைக்கில் வந்த இருவர் சுட்டுவிட்டுத் தப்புவது பதிவாகியுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

Tags:    

Similar News