இந்தியா

அமலாக்கத்துறை இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமனம்

Published On 2023-09-16 01:34 IST   |   Update On 2023-09-16 01:34:00 IST
  • அமலாக்கத்துறையின் பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் செயல்பட உள்ளார்.
  • சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

புதுடெல்லி:

அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018-ம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வருகிறார். இவரது பதவிக் காலத்தை நீட்டித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இவரது பதவி காலம் செப்டம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், அமலாக்கத் துறையின் இடைக்கால இயக்குனராக ராகுல் நவீன் என்பவரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அமலாக்கத்துறை இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை அமலாக்கத் துறை பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் செயல்படுவார் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News