நூற்றாண்டு நிறைவு: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் தேசிய கருத்தரங்கம் இன்று தொடக்கம்!
- இந்த கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து 1500 நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
- பல நாடுகளைச் சேர்ந்த தூதர்களும் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் அக்டோபர் மாதத்துடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இந்த நூற்றாண்டு கொண்டாத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தலைவர்கள் டெல்லியில் இன்று(ஆகஸ்ட் 26) முதல் ஆகஸ்ட் 28 வரை 3 நாள் சிறப்பு கருத்தரங்கு நடக்க உள்ளது. 3 நாட்களும் மாலையில் கருத்தரங்கம் நடைபெறும்.
இந்த கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து 1500 நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
விளையாட்டு, கலை, ஊடகம், நீதித்துறை, அரசியல் என பல்வேறு பின்னணியை சேர்ந்த பிரபலங்கள் இந்த கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பல நாடுகளைச் சேர்ந்த தூதர்களும் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் மீதான எதிர்மறை விமர்சனங்கள், மக்களை எப்படி தங்கள் அமைப்பை நோக்கி ஈர்ப்பது உள்ளிட்ட பல பொருண்மைகள் இந்த கருதரங்களில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
மத்தியில் ஆளும் பாஜகவுடன் நெருங்கிய தொடர்புடைய ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்த கருத்தரங்கு தற்போதைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.