இந்தியா

துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக சந்திரசேகர ராவின் BRS கட்சி அறிவிப்பு

Published On 2025-09-08 17:02 IST   |   Update On 2025-09-08 17:02:00 IST
  • துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்
  • பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது.

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

கடந்த மாதம் அவர்கள் இருவரும் துணை ஜனாதிபதி பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த னர். அதன் பிறகு அவர்கள் இருவரும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.

பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் எம்.பி.க்கள் பலம் இல்லை. எனவே நாளை நடக்கும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறிவித்துளளது

முன்னதாக நவின் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியும் துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News