இந்தியா

தெலுங்கானாவில் 11 வயதில் 22 புத்தகங்கள் எழுதிய சிறுவன்

Published On 2025-08-21 13:46 IST   |   Update On 2025-08-21 13:46:00 IST
  • 5-ம் வகுப்பு படிக்கும் போது 2 நண்பர்களிடையே உள்ள ஒழுக்கத்தை விளக்கும் புத்தகத்தை எழுதினார்.
  • விஷ்வ தேஜா எழுதிய 3 புத்தகங்கள் பள்ளிப் பாடங்களாக சேர்க்கப்பட்டு உள்ளது.

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் சின்னகோடு அடுத்த அனந்தசகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சந்தியா. தம்பதியின் மகன் விஸ்வ தேஜா (வயது 11). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

விஸ்வ தேஜா 4-ம் வகுப்பு படிக்கும் போது நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

5-ம் வகுப்பு படிக்கும் போது 2 நண்பர்களிடையே உள்ள ஒழுக்கத்தை விளக்கும் புத்தகத்தை எழுதினார்.

கடந்த ஆண்டு 18 புத்தகங்களை எழுதினார். இதுவரை 22 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

விஷ்வ தேஜா எழுதிய 3 புத்தகங்கள் பள்ளிப் பாடங்களாக சேர்க்கப்பட்டு உள்ளது. விளையாட்டின் போது பார்வை இழந்த ஒரு சிறுவனின் கதை, கனிம வளங்கள் முக்கியத்துவம் மற்றும் பல தகவல் தரும் கதைகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News