இந்தியா
"விமானத்தில் வெடிகுண்டு" - கழிவறை Tissue paper-இல் மிரட்டல் - ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்
- டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது.
- லக்னோ விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக 230 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் லக்னோ விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இன்று (ஜனவரி 18) காலை 8:46 மணியளவில் டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது.
புறப்பட்ட விமானத்தின் கழிவறையில் இருந்த Tissue பேப்பரில் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்ததை விமான பணியாளர்கள் கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து உடனடியாக லக்னோ விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 230 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். சோதனையில் இதுவரை வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.