இந்தியா

கேரளாவில் பிஸ்கட் சாப்பிட்ட குழந்தை மரணம்

Published On 2026-01-18 12:26 IST   |   Update On 2026-01-18 12:26:00 IST
  • சில பிஸ்கட்களை சாப்பிட்ட குழந்தை இஹான் திடீரென மயங்கினான்.
  • டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள காஞ்சிராம்குளம் பகுதியில் வசிப்பவர் ஷிஜில். இவரது மனைவி கிருஷ்ணபிரியா. இவர்களது மகன் இஹான் (வயது 1). சம்பவத்தன்று ஷிஜில் கடையில் இருந்து பிஸ்கட் வாங்கி வந்துள்ளார்.

அதனை மகனுக்கு கிருஷ்ண பிரியா கொடுத்துள்ளார். சில பிஸ்கட்களை சாப்பிட்ட குழந்தை இஹான் திடீரென மயங்கினான். உடனடியாக அவனை நெய்யாற்றின்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பிஸ்கட் சாப்பிட்ட குழந்தை இறந்ததாக வெளியான தகவல் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. குழந்தை இறந்தது ஏன்? என்பது தொடர்பான விபரம் பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News