இந்தியா

உஷாரய்யா உஷாரு!.. நபரின் பேண்ட் பாக்கெட்டுக்குள் வெடித்துச் சிதறிய ஆப்பிள் iPhone 13

Published On 2025-04-25 08:36 IST   |   Update On 2025-04-25 08:36:00 IST
  • செல்போன் கடுமையாக எரிந்து சேதமடைந்ததைக் காட்டுகிறது.
  • எரியும் தொலைபேசியை தனது பாக்கெட்டிலிருந்து விரைவாக வெளியே எடுத்து வீசினார்.

நம்பகத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றிக்கு கேரண்டி அளிப்பதால் ஆப்பிள் ஐபோன் அதிகம் வாங்கப்படும் போன் பிராண்ட் ஆக உள்ளது.

ஆனால் உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில் ஒரு நபரின் பாக்கெட்டிற்குள் ஆப்பிள் ஐபோன் 13 வெடித்துச் சிதறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, வெடிப்புக்கு பிறகு செல்போன் கடுமையாக எரிந்து சேதமடைந்ததைக் காட்டுகிறது. சாதனம் அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்தபோது ஏற்பட்ட வெடிப்பில் அந்த நபர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஆதாரங்களின்படி, அந்த நபர் சில நாட்களுக்கு முன்புதான் ஐபோன் 13 ஐ வாங்கியிருந்தார். வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பாக்கெட்டில் வைத்திருந்தபோது திடீரென போன் வெடித்துள்ளது. இதனால் காயமடைந்த அந்த நபர் வலியால் அலறி, எரியும் தொலைபேசியை தனது பாக்கெட்டிலிருந்து விரைவாக வெளியே எடுத்து வீசினார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   

Tags:    

Similar News