இந்தியா

பெங்களூரு கூட்டநெரிசல்.. காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கத்தை வாபஸ் பெற்ற கர்நாடக அரசு

Published On 2025-07-28 22:40 IST   |   Update On 2025-07-28 22:40:00 IST
  • சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
  • தங்கள் இடைநீக்கத்தை நீக்கக் கோரி அதிகாரிகள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

ஐபிஎல் 2025 போட்டியில் ஆர்சிபி வென்றதை கொண்டாடும்போது ஜூன் 4 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடக சித்தராமையா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து, காவல் ஆணையர் பி. தயானந்தா, கூடுதல் காவல் ஆணையர் விகாஸ் குமார் விகாஸ் மற்றும் துணை காவல் ஆணையர் சேகர் எச். தேக்கண்ணவர், காவல் உதவி ஆணையராகப் பணியாற்றிய டி.எஸ்.பி சி. பாலகிருஷ்ணா மற்றும் கப்பன் பார்க் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான நீதித்துறை ஆணையமும், மாவட்ட நீதிபதி குழுவும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை முடித்து, அரசாங்கத்திடம் அறிக்கைகளை சமர்ப்பித்ததால், தங்கள் இடைநீக்கத்தை நீக்கக் கோரி அதிகாரிகள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

அறிக்கையை கருத்தில் கொண்டு, அதிகாரிகளின் இடைநீக்க உத்தரவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் அவர்களின் இடைநீக்கத்தை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது.

Tags:    

Similar News