இந்தியா

அயோத்தி ராமர் கோவிலில் மதியம் ஒரு மணிநேரம் நடை அடைப்பு: அறக்கட்டளை நிர்வாகம்

Published On 2024-02-17 04:15 GMT   |   Update On 2024-02-17 06:51 GMT
  • பால ராமரை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
  • காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அயோத்தி:

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 23-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பால ராமரை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இடையில் 2 மணி நேரம் நடை அடைக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கோவில் நடை அடைப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறியதாவது:-

அயோத்தி ராமர் கோவிலில் தினமும் மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, தினமும் ஒரு மணிநேரம் மட்டும் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இவ்வாறு தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறினார்.

Tags:    

Similar News