இந்தியா

ஆஸ்திரேலிய துப்பாக்கிச் சூடு: பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது- பிரதமர் மோடி கண்டனம்

Published On 2025-12-14 17:41 IST   |   Update On 2025-12-14 17:41:00 IST
  • போண்டி கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
  • தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூடு இன்று பிற்பகல் 2.17 மணியளவில் நடந்தது. தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்போது,"பயங்கரவாத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸஅ தள பதிவி் கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவின் போன்டி கடற்கரையில் யூதர்களை குறிவைத்து கொடூரமாக நடந்த பயங்கர தாக்குதலை கண்டிக்கிறேன்.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலியா மக்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News