இந்தியா

மக்களவையில் பேச ஒதுக்கப்பட்ட நேரத்தில் வியட்நாமில் இருந்தார்: ராகுல் காந்தியை சாடிய அமித்ஷா

Published On 2025-03-29 04:08 IST   |   Update On 2025-03-29 04:08:00 IST
  • மக்களவையில் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
  • மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அவையில் பேசுவதற்கு விதிகள் உள்ளன என்றார் அமித்ஷா.

புதுடெல்லி:

மக்களவையின் கண்ணியத்தை நிலைநிறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளை ராகுல் காந்தி பின்பற்றவேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, மக்களவையில் தனக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தியின் விமர்சனம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதாவது:

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அவையில் பேசுவதற்கு விதிகள் உள்ளன. அவற்றை விருப்பப்படி நடத்த முடியாது என்பது தெரியாமல் இருக்கலாம்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் அவருக்கு (ராகுல் காந்திக்கு) 42 சதவீத நேரம் வழங்கப்பட்டது. அப்போது யார் பேசுவது என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆனால் பாராளுமன்றத்தில் ஒரு தீவிர விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அவர் வியட்நாமில் இருந்தார், அவர் திரும்பி வந்ததும், தனது விருப்பப்படி பேச வலியுறுத்தத் தொடங்கினார்.

பாராளுமன்றம் விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி இயங்குகிறது. காங்கிரஸ் கட்சியைப் போல அல்ல, ஒரு குடும்பத்தால் நடத்தப்படுகிறது, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பேசலாம். நான் சொல்வதற்கு வருந்துகிறேன், அவர்கள் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News