இந்தியா

260 பேரை பலிவாங்கிய விமான விபத்து: மத்திய அரசிடம் முதல் கட்ட அறிக்கை தாக்கல்

Published On 2025-07-08 14:47 IST   |   Update On 2025-07-08 14:47:00 IST
  • அகமதாபாத் விமான விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
  • இந்த சம்பவம் தொடர்பாக விமான நிறுவனம் ஆய்வு நடத்திவருகிறது.

புதுடெல்லி:

கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விமான நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது.

விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 260 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.

இந்நிலையில், விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் குழுவினர் விமான விபத்து தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இன்று சமர்ப்பித்துள்ளனர்.

இதுதொடர்பான விரிவான அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என தெரிகிறது.

Tags:    

Similar News