இந்தியா

காது கேளாத வாய் பேச முடியாத பழங்குடியின சிறுமி தீவைத்துக் கொலை.. நடவடிக்கை எடுக்காத காவல்துறை

Published On 2024-05-22 08:53 GMT   |   Update On 2024-05-22 08:55 GMT
  • ராஜஸ்தானில் கைது கேளாத வாய்பேச முடியாத 11 வயது பழங்குடியின சிறுமி தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று (மே 20) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜஸ்தானில் கைது கேளாத வாய்பேச முடியாத 11 வயது பழங்குடியின சிறுமி தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கரொளலி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த வாரம் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, உள்ளே இருந்த தாய்க்கு அலறல் சத்தம் கேட்டது.

வெளியே ஓடிவந்து பார்த்த போது , வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பண்ணையில் மகள் உடலில் தீக்காயங்களுடன் வலியால் கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். அப்போது அந்த சிறுமி தாயிடம். சைகைகளில், இரண்டு பேர் தனக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறினாள்.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று (மே 20) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி தீவைக்கப்ட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள்ளது.

 

 

முன்னதாக கடந்த மே 14 ஆம் தேதி மருத்துவமனையில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வந்த காவல்துறையினர் காட்டிய புகைப்படங்களில் இருந்த ஒருவனை சிறுமி அடையாளம் காட்டியது குறிப்பிடத்தக்கது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தடயங்களை அளிக்க தீவைத்து எரிக்கப்பயிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே உடல் முழுதும் தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் காட்சிகள் வெளியாகி காண்போரின் மனதை பதைபதைக்க வைக்கின்றன.  

Tags:    

Similar News