இந்தியா
11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கோடரியால் வெட்டி வீசிய கொடூரன்
- வயல்வெளியில் சிறுமி சடலமாகக் கிடப்பதை கிராம மக்கள் கண்டனர்.
- அவர் சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கரில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் சோன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, கடந்த டிசம்பர் 31-ம் தேதி முதல் காணாமல் போயிருந்தார்.
சிறுமியைத் தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று அருகிலுள்ள கோஸ்ரா கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் சிறுமி சடலமாகக் கிடப்பதை கிராம மக்கள் கண்டனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், பின்னர் ஆதாரங்களை மறைக்க கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகச் 24 வயது இளைஞரை போலிசார் கைது செய்துள்ளனர். அவர் சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.