இந்தியா

தெலுங்கானாவில் ஒரே மாதத்தில் 900 தெருநாய்கள் கொன்று புதைப்பு - அதிரவைக்கும் காரணம்

Published On 2026-01-24 15:32 IST   |   Update On 2026-01-24 15:32:00 IST
  • பஞ்சாயத்துத் தேர்தலின் போது "தெருநாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லையை ஒழிப்போம்" என்று வாக்குறுதி அளித்தனர்.
  • கிராமங்களின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மீது வழக்குபதியப்பட்டது.

தெலுங்கானாவில் உள்ள கிராமங்களில் சுமார் 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹனுமகொண்டா மாவட்டத்தில் உள்ள ஷியாம்பேட் மற்றும் அரேபள்ளி கிராமங்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாயத்துத் தேர்தலின் போது "தெருநாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லையை ஒழிப்போம்" என்று வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, பஞ்சாயத்து தலைவர்கள் இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது.

பஞ்சாயத்து தலைவர்கள் இருவரை வாடகைக்கு அமர்த்தி, தெருநாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி அவற்றைக் கொன்றுள்ளனர். பின்னர் அந்த உடல்களை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் குழிதோண்டிப் புதைத்துள்ளனர்.

விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், இதில் ஷியாம்பேட் மற்றும் அரேபள்ளி கிராமங்களின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களின் கணவர்கள், பஞ்சாயத்துச் செயலாளர்கள் மற்றும் நாய்களைக் கொன்ற கூலி ஆட்கள் ஆகிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த ஒரு மாதத்தில் மட்டும் தெலுங்கானா முழுவதிலும் உள்ள பல்வேறு கிராமங்களில் இதேபோல 900 நாய்கள் கொல்லப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News