இந்தியா

இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு.. 5 பேருக்கு தொற்று உறுதி - தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர்

Published On 2026-01-24 13:34 IST   |   Update On 2026-01-24 13:34:00 IST
  • காய்ச்சல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை நிபா வைரஸ் ஆரமபகட்ட அறிகுறிகளாகும்.
  • இறப்பு ஏற்பட வாய்ப்பு 40% முதல் 75% வரை மிக அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 5 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவப் பணியாளர்களும் அடங்குவர்.

பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பழம் தின்னும் வௌவால்கள் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது.

காய்ச்சல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை நிபா வைரஸ் ஆரமபகட்ட அறிகுறிகளாகும்.

நோய்த்தொற்று மோசமானால் மூளை அழற்சி ஏற்பட்டு உயிரிழப்பிற்கு வழிவகுக்கும்.

நிபா வைரஸிற்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை.

இறப்பு ஏற்பட வாய்ப்பு 40% முதல் 75% வரை மிக அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு  எச்சரித்துள்ளது. 

Tags:    

Similar News