உஜ்ஜைன் வன்முறை
மத்தியப் பிரதேசத்தில் வெடித்த வன்முறை.. வாகனங்களுக்கு தீ வைத்து, கடைகளை நொறுக்கிய இந்துத்துவா அமைப்பினர்
- கடைகளை அடித்து நொறுக்கியும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர்.
- அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள தரானா நகரில், இந்துத்துவா அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் அணித் தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.
இந்தத் தகவல் பரவியதும் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தின் போது நேற்று வன்முறை வெடித்தது.
விஸ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் கற்களை வீசியும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தீயிட்டு கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகளை அடித்து நொறுக்கியும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர்.
வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.வன்முறையில் ஈடுபட்டதாகப் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.