இந்தியா

50 சிசேரியன் பிரசவங்கள்.. சிக்கிய போலி மருத்துவர் - ஆபரேஷன் தியேட்டரில் வைத்து கைது செய்த போலீஸ்

Published On 2025-08-06 04:45 IST   |   Update On 2025-08-06 04:45:00 IST
  • விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது
  • இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர்.

அசாமில் உள்ள ஸ்ரீபூமியைச் சேர்ந்தவர் புலோக் மலாக்கர். இவர் சில்சாரில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளாக கைனகாலஜிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார்.

இதுவரை சுமார் 50 பிரசவங்களை செய்துள்ளார். அதுவும் சிசேரியன் பிரசவங்கள். இந்நிலையில் அவர் போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடைசியாக ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.

மூத்த காவல்துறை அதிகாரி நுமல் மஹாதா கூறுகையில், புலோக் ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்றும், விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது என்றும் கூறினார். ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரியில் போலி மருத்துவர்களைப் பிடிக்க அசாம் அரசு சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.   

Tags:    

Similar News