இந்தியா

3 மாதத்தில் 2வது சம்பவம்.. பிரபல பல்கலைக்கழகத்தில் நேபாள மாணவி தற்கொலை

Published On 2025-05-02 06:33 IST   |   Update On 2025-05-02 10:49:00 IST
  • கணினி அறிவியலில் பி.டெக் படித்து வந்தவர்.
  • நேபாள அரசு மற்றும் ஒடிசா அரசின் தலையீட்டின் பின் சமரசம் ஏற்பட்டது.

ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT)-ல் படிக்கும் நேபாள மாணவி (18) நேற்று தனது விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அந்த மாணவி கணினி அறிவியலில் பி.டெக் படித்து வந்தவர். மாணவியின் மரணம் குறித்து ஒடிசா காவல்துறை நேபாள தூதரகத்திற்குத் தகவல் அளித்துள்ளது.

இன்று உடல் எய்ம்ஸ் புவனேஸ்வரில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஒடிசா காவல்துறை தெரிவித்தது.

முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன்பு KIIT இல் பயின்று வந்த மற்றொரு நேபாள மாணவி பிரகிருதி லாம்சலின் தற்கொலை அங்கு அதிக எண்ணிக்கையில் பயிலும் நேபாள மாணவர்களின் போராட்டத்தைத் தூண்டியது.

நேபாள மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். நேபாள அரசு மற்றும் ஒடிசா அரசின் தலையீட்டின் பின் சமரசம் ஏற்பட்ட நிலையில் தற்போது மற்றொரு நேபாள மாணவி இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News