இந்தியா
பிரதமர் மோடி- ராகுல் காந்தி

லடாக் ராணுவ வீரர்கள் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்

Published On 2022-05-27 14:05 GMT   |   Update On 2022-05-27 14:05 GMT
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லடாக்கின் துர்துக் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 26 ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு சென்றபோது ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 19 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

லடாக்கில் நடந்த வாகன விபத்தில் எங்கள் துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்துவிட்டோம் என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

விபத்து குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன" என்று குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், " லடாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கு நேர்ந்த சோகமான விபத்து குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த நமது வீரர்கள் வீரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்." என்றார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சாலை விபத்தில் உயிரிழந்த 7 ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், லடாக்கில் இன்று காலை எங்கள் 7 துணிச்சலான வீரர்கள் இறந்த அதிர்ச்சிகரமான சாலை விபத்தால் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். இந்த விபத்தில் மேலும் சிலர் பலத்த காயமடைந்தனர். பிரிந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. தமிழை உயர்த்திப் பிடித்திருக்கிறார் பிரதமர் மோடி- அண்ணாமலை
Tags:    

Similar News