இந்தியா
லாரி மீது மோதிய பேருந்து

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

Update: 2022-05-24 13:20 GMT
பை பாஸ் சாலையில் பயணிக்கும் போது முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல நினைத்த ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்க ஆரம்பித்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹுப்பள்ளி:

மகராஷ்டிரா மாநிலம் கோலக்பூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று  பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது.

கர்நாடகாவின் ஹுப்பள்ளி - தார்வார்ட் பைப்பாஸ் சாலையில் பயணிக்கும் போது  முன்னாள் சென்ற லாரியை முந்திக் கொண்டு செல்ல நினைத்த ஓட்டுநர், பேருந்தை வேகமாக இயக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், படுகாயமடைந்த ஓட்டுநர் உள்பட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹூப்பள்ளியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Tags:    

Similar News