செய்திகள்
சீரடி கோவில்

கொரோனா குறைந்ததால் சீரடி கோவிலில் பக்தர்களுக்கு உணவு, பிரசாதம் வழங்க அனுமதி

Published On 2021-11-25 02:41 GMT   |   Update On 2021-11-25 02:41 GMT
கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட ஊழியர்கள் மற்றும் 50 சதவீத இருக்கை வசதியுடன் மட்டுமே அன்னதான கூடம் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சீரடி :

லட்சக்கணக்கான பக்தர்கள் நாள் தோறும் வந்து செல்லும் மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முடங்கியது. பக்தர்கள் வருகைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து சமீபத்தில் நீக்கப்பட்டது. தற்போது ஆன்லைன் பதிவு செய்யும் 15 ஆயிரம் பக்தர்களுக்கும், நேரடியாக வரும் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்மூலம் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்ய முடிகிறது.

இருப்பினும் கோவில் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் அன்னதானம், பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் ஆகியவை வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் நிறுத்தப்பட்ட இந்த வசதிகளை மீண்டும் தொடங்க கோவில் அறக்கட்டளைக்கு அனுமதி அளித்து அகமதுநகர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர போசலே உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட ஊழியர்கள் மற்றும் 50 சதவீத இருக்கை வசதியுடன் மட்டுமே அன்னதான கூடம் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News