உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு

Published On 2026-01-22 00:24 IST   |   Update On 2026-01-22 00:24:00 IST
  • டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது.
  • அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மாநாட்டில் உரையாற்றுகிறார்.

வாஷிங்டன்:

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மாநாட்டில் உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் டிரம்ப் வாஷிங்டனில் இருந்து ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்டார்.

விமானம் வானில் பறந்தபோது அதில் தொழில்நுட்பக் கோளாறு திடீரென ஏற்பட்டது. உடனடியாக செயல்பட்ட விமானி, விமானத்தை மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார்.

இதையடுத்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற அதிகாரிகள் வேறு ஒரு விமானத்தின் மூலம் மீண்டும் சுவிட்சர்லாந்து நோக்கி பயணத்தைத் தொடர்ந்தனர்.

அதிபர் டிரம்ப் பயணித்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News