உலகம்
ஸ்பெயினில் ரெயில் விபத்தில் 40 பேர் உயிரிழந்த சோகம் நீங்காத நிலையில் மீண்டும் ரெயில் விபத்து
- தடம் புரண்ட அந்த ரெயில் பக்கத்து தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரெயிலின் மீது பயங்கரமாக மோதியது.
- ரெயில்கள் மோதிய விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்
ஜனவரி 18 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேக ரெயில, தெற்கு அண்டலூசியாவில் உள்ள அடமுஸ் அருகே திடீரென தடம் புரண்டது.
தடம் புரண்ட அந்த ரெயில் பக்கத்து தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரெயிலின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு ரெயில்களுமே பலத்த சேதமடைந்தன.
இந்த விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், ஸ்பெயினின் பார்சிலோனா அருகே மற்றொரு பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் ரெயில் ஓட்டுநர் உயிரிழந்தார். ஏராளமான பயணிகள் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.