உலகம்

VIDEO: ரஷியாவில் வரலாறு காணாத அளவில் கடுமையான பனிப்பொழிவு -இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2026-01-21 03:45 IST   |   Update On 2026-01-21 03:45:00 IST
  • ரஷியாவில்146 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையான பனிப்பொழிவு என்று கூறப்படுகிறது.
  • உயரமான கட்டிடங்களில் 4-வது மாடி வரை பனியால் சூழப்பட்டுள்ளது.

ரஷியாவின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது ரஷியாவில்146 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையான பனிப்பொழிவு என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் பனியால், வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரை வரை பனி படர்ந்துள்ளது. பல இடங்களில் பனியின் உயரம் பல மீட்டர்களை எட்டியுள்ளது.

தலைநகர் மாஸ்கோ மற்றும் பல்வேறு நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரஷியாவின் கம்சட்கா தீபகற்பம் பனிப்பொழிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு பனிக் குவியல்கள் 10 முதல் 40 அடி உயரம் வரை சேர்ந்துள்ளன.

உயரமான கட்டிடங்களில் 4-வது மாடி வரை பனியால் சூழப்பட்டுள்ளது. சாலைகளில் மலை போல் பனி குவிந்துள்ளதால் கார் உள்ளிட்ட வாகனங்கள் முற்றிலுமாகப் புதைந்துள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

மோசமான வானிலை காரணமாகச் சகாலின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது மற்றும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடும் பனிப்பொழிவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பனியை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

Tags:    

Similar News