உலகம்

காசா அமைதிக் குழுவில் உறுப்பினராக சேர ரஷிய அதிபர் புதினுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்

Published On 2026-01-21 03:00 IST   |   Update On 2026-01-21 03:01:00 IST
  • ரஷியா கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமைதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது
  • காசா பகுதியில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைச் சீரமைப்பது மற்றும் அங்கு அமைதியை நிலைநாட்டுவது இதன் நோக்கம்.

போர் நிறுத்தத்தின் பின் காசாவின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைக் கண்காணிக்க காசா அமைதிக் குழுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ளார்.

இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

அந்த வகையில் காசா அமைதிக் குழுவில் உறுப்பினராக இணையுமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரஷியா கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமைதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது.

இத்தகைய சூழலில், ரஷிய அதிபர் புதினை காசா அமைதிக் குழுவில் இணையுமாறு டிரம்ப் அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குழுவின் முக்கிய நோக்கம் காசா பகுதியில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைச் சீரமைப்பது மற்றும் அங்கு அமைதியை நிலைநாட்டுவது என்று கூறப்படுகிறது. 

இதற்கிடையே காசா அமைதிக் குழுவில் சேர மறுத்தால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200 சதவீதம் வரி விதிப்பேன் என அந்நாட்டு அதிபர் மாக்ரோனை டிரம்ப் மிரட்டியுள்ளார். 

Tags:    

Similar News