உலகம்

டிரம்ப் அமைத்த காசா அமைதிக் குழு.. மத்திய கிழக்கில் முதல் ஆளாக இணைந்த ஐக்கிய அரபு அமீரகம்

Published On 2026-01-21 05:17 IST   |   Update On 2026-01-21 05:17:00 IST
  • காசாவின் நிர்வாகத்தைச் சீரமைப்பது இந்த குழுவின் நோக்கம்.
  • மேலும் பல நாடுகள் விரைவில் இதில் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இக்குழுவில் இணையும் முதல் அரபு நாடு என்ற அந்தஸ்தை அமீரகம் பெற்றுள்ளது.

காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது, அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகத்தைச் சீரமைப்பது ஆகியவையே இந்த குழுவின் முக்கிய நோக்கங்களாகும்.

இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்த நிலையில்  அமீரகத்தின் இந்த முடிவைத் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

இது மத்திய கிழக்கில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்றும், மேலும் பல நாடுகள் விரைவில் இதில் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

 இதற்கிடையே காசா அமைதிக் குழுவில் சேர மறுத்தால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200 சதவீதம் வரி விதிப்பேன் என அந்நாட்டு அதிபர் மாக்ரோனை டிரம்ப் மிரட்டியுள்ளார்.

Tags:    

Similar News