என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏர்பஸ் நிறுவனம்"

    • டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது.
    • அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மாநாட்டில் உரையாற்றுகிறார்.

    வாஷிங்டன்:

    சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மாநாட்டில் உரையாற்றுகிறார்.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் டிரம்ப் வாஷிங்டனில் இருந்து ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்டார்.

    விமானம் வானில் பறந்தபோது அதில் தொழில்நுட்பக் கோளாறு திடீரென ஏற்பட்டது. உடனடியாக செயல்பட்ட விமானி, விமானத்தை மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார்.

    இதையடுத்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற அதிகாரிகள் வேறு ஒரு விமானத்தின் மூலம் மீண்டும் சுவிட்சர்லாந்து நோக்கி பயணத்தைத் தொடர்ந்தனர்.

    அதிபர் டிரம்ப் பயணித்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    உலகின் மிகப்பெரிய ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் தயாரிப்பதை 2021-ம் ஆண்டு நிறுத்த உள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. #Airbus #WorldLargetJumboJet #A380
    துலூஸ்:

    ஐரோப்பாவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் ‘ஏர்பஸ்’. உலகிலேயே மிகப்பெரிய விமானமான ‘சூப்பர்ஜம்போ ஏ380’ ரக விமானங்களை இந்நிறுவனம் தயாரித்து வந்தது.

    500 பயணிகள் அமரும் வண்ணம், 2 அடுக்குகளை கொண்ட ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளன.

    இந்த நிலையில், ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் தயாரிப்பதை 2021-ம் ஆண்டு நிறுத்த உள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்களை தயாரிக்க செலவு அதிகம் என்பதாலும், கடந்த சில ஆண்டுகளில் அதன் கொள்முதல் மிகவும் குறைந்துவிட்டதே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

    ×