உலகம்

மின்கட்டமைப்பை குறிவைக்கும் ரஷியா: கடுங்குளிரால் தவிக்கும் உக்ரைன் தலைநகர் மக்கள்

Published On 2026-01-21 21:28 IST   |   Update On 2026-01-21 21:28:00 IST
  • உக்ரனைில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரிக்கு கீழ் குறைந்து வாட்டி வதைக்கிறது.
  • மக்கள் ஹீட்டர் போன்றவற்றை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் தொடங்கி 4 ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. என்றபோதிலும் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

தற்போது நவீன டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் உக்ரைனில் உள்ள மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் குடியிருக்கும் வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

தற்போது உக்ரைனில் கடுமையான குளிர்காலம் ஆகும். மைனஸ் 20 டிகிரிக்கு வெப்பநிலை குறைந்துள்ளது. குளிர்காலத்தை தாங்குவதற்கு மக்கள் ஹீட்டர் போன்றவற்றை பயன்படுத்துவார்கள். ஆனால், மின்சாரம் இல்லாததால் கடுங்குளிரால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் 60 சதவீதம் இடங்களில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சுமார் 4 ஆயிரம் கட்டிடங்கள் மின்சார தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.

ரஷியா அதிபர் புதியை, அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் சந்தித்து பேச இருக்கிறார். உக்ரைன் குழுவையும் சந்தித்து பேச இருக்கிறார்.

Tags:    

Similar News