உலகம்

கிரீன்லாந்துக்கு எதிராக படைகளை பயன்படுத்த மாட்டோம்: அதிபர் டிரம்ப்

Published On 2026-01-22 02:44 IST   |   Update On 2026-01-22 02:44:00 IST
  • கிரீன்லாந்து மக்கள் எங்களுக்கு நன்றி உணர்வுடன் இல்லை.
  • கிரீன்லாந்தை எங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்றார்.

லாவோஸ்:

சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

கிரீன்லாந்தை எங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும். வேறு யாராலும் கிரீன்லாந்தை பாதுகாக்க முடியாது. கிரீன்லாந்தை நாங்கள் பாதுகாத்து அதனை டென்மார்க்கிடம் வழங்கினோம். இது நாங்கள் செய்த முட்டாள்தனம். இப்போது கிரீன்லாந்து மக்கள் எங்களுக்கு நன்றி உணர்வுடன் இல்லை. கிரீன்லாந்துக்கு எதிராக படைபலத்தை பயன்படுத்த மாட்டேன்.

அமெரிக்க அதிபர்கள் கடந்த 2 நூற்றாண்டாக கிரீன்லாந்தை வாங்க முயன்று வருகின்றனர். பனியால் சூழப்பட்ட இந்த மாபெரும் நிலப்பரப்பை எங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். இது நேட்டோவுக்கான மிரட்டல் அல்ல. நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒன்றை யாராலும் மறுக்க முடியாது.

நாங்கள் நேட்டோவிற்கு எவ்வளவு கொடுக்கிறோம். ஆனால் அதற்கு பதிலாக குறைந்த அளவில் தான் நேட்டோவிடம் இருந்து பலன் பெறுகிறோம். நான் பல ஆண்டுகளாக நேட்டோவை எதிர்க்கும் விமர்சகராக இருந்து வருகிறேன். ஆனாலும், வேறு எந்த அதிபரையும் விட நான் நேட்டோவிற்கு அதிகமாக அள்ளிக் கொடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News