செய்திகள்

உ.பி.: மெயின்புரியில் முலாயம் சிங்கும், அசம்காரில் அகிலேஷ் யாதவும் வெற்றி

Published On 2019-05-23 20:29 GMT   |   Update On 2019-05-23 20:29 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கும், அவரது மகனும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவும் வெற்றி பெற்றுள்ளனர்.
லக்னோ:

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கும், அவரது மகனும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவும் வெற்றி பெற்றுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி தொகுதியில் போட்டியிட்ட முலாயம் சிங் 5,24,926 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரேம் சிங் ஷாக்யா 4,30, 537 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் முலாயம் சிங் 94,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

உபியின் அசம்கார் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், 6,21,578 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான தினேஷ் லால் யாதவ் நிராஹுவா 361704 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் அகிலேஷ் யாதவ் 2 லட்சத்து 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
Tags:    

Similar News