செய்திகள்

இந்திய தேர்தலில் தலையிட இம்ரான் கானுக்கு உரிமை இல்லை- ஒவைசி கண்டனம்

Published On 2019-04-11 10:25 GMT   |   Update On 2019-04-11 10:25 GMT
இந்திய தேர்தல் நடைமுறைகளில் தலையிட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு உரிமை இல்லை என மஜ்லிஸ்கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan
ஐதராபாத்:

இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி, இன்று வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டு போட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக இம்ரான் கான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.


இந்தியா போன்ற சிறந்த நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவதற்கு இம்ரான் கானுக்கு உரிமை இல்லை என்று ஒவைசி கூறினார்.

தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் மஜ்லிஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan 
Tags:    

Similar News