செய்திகள்

மராட்டியத்தில் நக்சலைட்டுகள் பகுதியில் அமித்ஷா தேர்தல் பிரசாரம் ரத்து

Published On 2019-04-08 14:50 IST   |   Update On 2019-04-08 14:50:00 IST
மராட்டியத்தில் நக்சலைட்டுகள் பகுதியில் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக அமித்ஷாவின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. #LoksabhaElections2019 #BJP #Amitshah
மும்பை:

மராட்டியத்தில் காட்சி ரோலி மற்றும் சந்திராபூர் மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்தது. பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அங்கு நேற்று 11 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

2 பொதுக்கூட்டங்களில் பேசி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் காட்சிரோலி மற்றும் சந்திராபூருக்கு வந்தார். ஹெலிகாப்டர் இறங்கும் மைதானத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.

ஆனால் அவர் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பிரசாரம் செய்யாமல் ரத்து செய்து விட்டார்.

இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய நிதி மந்திரியுமான சுதிர் முஸ்கான்டிவர் கூறும் போது, “தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக அங்கு செல்ல முடியாததால் அவர் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை” என்றார்.

ஆனால் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. #LoksabhaElections2019 #BJP #Amitshah
Tags:    

Similar News