செய்திகள்

மாதா அமிர்தானந்த மயிக்கு மைசூர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது

Published On 2019-03-23 11:28 GMT   |   Update On 2019-03-23 12:26 GMT
ஆன்மிக தலைவரான மாதா அமிர்தானந்த மயி தேவிக்கு மைசூர் பல்கலைக்கழகம் இன்று டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. #MataAmritanandamayi #UniversityofMysore
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் வல்லிகாவு கிராமத்தில் மாதா அமிர்தானந்த மயிக்கு ஆஸ்ரமம் உள்ளது. ஆன்மிக தலைவரான இவரது பெயரால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆஸ்ரமம் மட்டும் கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், 40க்கும் மேற்பட்ட நாடுகளில் அமிர்தானந்த மயியின் ஆஸ்ரமங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆன்மிக தலைவரான மாதா அமிர்தானந்த மயி தேவிக்கு மைசூர் பல்கலைக்கழகம் இன்று டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.



இதுதொடர்பாக மைசூர் பல்கலை துணை வேந்தர் ஹேமநாத குமார் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியதாவது:

மைசூர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மார்ச் 17-ம் தேதி அமிர்தானந்த மயி ஆசிரமத்தில் நடைபெற்றது. அப்போது, மாதா அமிர்தானந்த மயிக்கு மைசூர் பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஏழை, எளியோருக்கு அவர் ஆற்றிவரும் சேவைகளை கவுரவிக்கும் வகையில் இந்த டாக்டர் பட்டம் வழங்கினோம் என தெரிவித்துள்ளார். #MataAmritanandamayi #UniversityofMysore
Tags:    

Similar News