செய்திகள்

தமிழக பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டி

Published On 2019-03-21 14:48 GMT   |   Update On 2019-03-21 14:48 GMT
தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடுகிறார். #bjp #tamilisai #ponradhakrishnan
சென்னை:

பா.ஜனதா கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கான 184 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்றிரவு வெளியிட்டது. இதில் தமிழகத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

அதன்படி கன்னியாகுமரில் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிடுகிறார்.

ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும், சிவகங்கையில் எச். ராஜாவும், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகிறார்கள். #bjp #tamilisai #ponradhakrishnan
Tags:    

Similar News