சினிமா செய்திகள்
சூர்யாவின் புது பட இயக்குனர் இவரா?
- அடுத்தடுத்து புதிய படங்களில் நடித்து வருகிறார்.
- உண்மை சம்பவங்களை தழுவி இக்கதை எடுக்கப்பட இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
அதனைத்தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்திலும், ஜீத்து மாதவன் இயக்கத்திலும் அடுத்தடுத்து புதிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சூர்யாவின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி எதார்த்தமான படங்களை எடுத்து கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. உண்மை சம்பவங்களை தழுவி இக்கதை எடுக்கப்பட இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.