செய்திகள்

மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக அப்சரா ரெட்டி நியமனம் - ராகுலை சந்தித்து வாழ்த்து பெற்றார்

Published On 2019-01-08 19:41 IST   |   Update On 2019-01-08 19:41:00 IST
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். #Congress #RahulGandhi #ApsaraReddy
புதுடெல்லி:

சமூக செயற்பாட்டாளராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருபவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, அப்சரா ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். #Congress #RahulGandhi #ApsaraReddy
Tags:    

Similar News