செய்திகள்

பா.ஜனதாவின் ரத யாத்திரையால் கலவரம் ஏற்படும் - மம்தா பானர்ஜி

Published On 2018-12-29 09:53 GMT   |   Update On 2018-12-29 09:53 GMT
பா.ஜனதாவின் ரத யாத்திரையால் கலவரம் ஏற்படும் என்று மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #BJP #MamataBanarjee

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி ஜனநாயகத்தை காப்போம் என்ற ரத யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்த பா.ஜனதா திட்டமிட்டது.

ஆனால் இந்த யாத்திரை நடந்தால் அமைதிக்கு குந்தகம் ஏற்படும், யாத்திரை செல்லும் இடங்களில் வன்முறை நடக்கும் என்று உளவுத்துறை மேற்கு வங்காள அரசை எச்சரித்தது. இதை தொடர்ந்து பா.ஜனதா ரத யாத்திரைக்கு முதல்-மந்திரி மம்தாபானர்ஜி அனுமதி மறுத்தார்.

இதையடுத்து கொல்கத்தா ஐகோர்ட்டில் பா.ஜனதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஒரு நீதிபதி கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கினார். இதை தொடர்ந்து இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா செய்ய தொடங்கியது.

ஆனால் இதை எதிர்த்து மேற்கு வங்காள அரசு அப்பீல் செய்தது. இந்த வழக்கில் பா.ஜனதா ரத யாத்திரைக்கு தடை விதித்தது. உளவுதுறை அறிக்கையை தீவிரமாக ஆய்வு செய்த பின் முடிவு எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. தற்போது சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் பா.ஜனதாவின் ரத யாத்திரை மதத்தை வளர்க்காது. கலவரத்தை தான் ஏற்படுத்தும் என்று மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-

இஸ்கான் அமைப்பினர் நடத்திய ரத யாத்திரையில் நான் பங்கேற்று இருக்கிறேன். இது பகவான் ஜெகநாதர் யாத்திரை. மக்களை ஒன்று திரட்ட நடத்தப்படும் யாத்திரையாகும்,

ஆனால் ரத யாத்திரை நடத்துவது மக்களை கொல்வதற்கு அல்ல. ரத யாத்திரை என்றால் மக்களை கொல்வது என்று பொருள் அல்ல. வன்முறை யாத்திரை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பா.ஜனதாவினர் ரத யாத்திரை கலவரத்தைதான் ஏற்படுத்தும். மதத்தை வளர்ப்பதற்கான யாத்திரையாக இது இருக்காது.

இவ்வாறு மம்தா பானஜி கூறியுள்ளார். #BJP #MamataBanarjee

Tags:    

Similar News