செய்திகள்

சொந்த கட்சி தலைவரின் பெயரையே அறியாதவர் ராகுல் காந்தி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Published On 2018-12-05 11:21 GMT   |   Update On 2018-12-05 11:21 GMT
ராஜஸ்தானில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவரது கட்சி தலைவர்களின் பெயரே தெரிவதில்லை என குற்றம் சாட்டினார். #RajasthanAssemblyElections #BJP #PMModi #Congress #RahulGandhi
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் இந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதையடுத்து, அங்கு அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில், பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலம் சுமர்பூர் மற்றும் பாலி ஆகிய பகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார். சுமர்பூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:

சோனியா மற்றும் ராகுல் காந்தியின் வருமான வரி கணக்கு விபரங்களை மறு ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசுக்கு கிடைத்த வெற்றி.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளை விசாரிக்க தொடங்கி உள்ளதால் ஜாமீனில் இருக்கும் சோனியாவும், ராகுலும் கோபத்தில் உள்ளனர்



ராஜஸ்தானின் ஜாட் சமூகத்தை சேர்ந்த விவசாயி கும்பாராம்ஜி சமீபத்தில் மறைந்தார். காங்கிரஸ்காரரான இவர் அப்பகுதியில் புகழ்வாய்ந்தவராக திகழ்ந்தார்.

ஆனால், காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி இவரது பெயரை கும்பாராம்ஜி என்பதற்கு பதிலாக கும்பகர்ணன்ஜி  என அழைக்கிறார்.

தனது கட்சியின் முக்கிய பிரமுகரின் பெயரைக்கூட காங்கிரஸ் தலைவருக்கு சரியாக உச்சரிக்க முடியவில்லை. இதுபோன்றவர்கள்  ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் அறிவார்கள்.

ராஜஸ்தான் மாநில மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். ராஜஸ்தானின் ஒவ்வொரு பூத்திலும் வெற்றி பெற வேண்டியது மட்டுமே எங்கள் வேலை என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElections #BJP #PMModi #Congress #RahulGandhi
Tags:    

Similar News