மேடையில் 20 வயது நடிகையை முத்தமிட்ட 71 வயது நடிகர் - விமர்சனத்துக்கு விளக்கம்
- ரன்வீருக்கு ஜோடியாக அவரை விட 20 வயது குறைவான இளம் நடிகை சாரா அர்ஜுன் நடித்திருந்தார்.
- சாராவுக்கு தந்தையாக 71 வயதான மூத்த நடிகர் ராகேஷ் பேடி நடித்திருந்தார்.
ரன்வீர் சிங் நடிப்பில் துரந்தர் திரைப்படம் அண்மையில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது வருகிறது.
இந்த படத்தில் ரன்வீருக்கு ஜோடியாக அவரை விட 20 வயது குறைவான இளம் நடிகை சாரா அர்ஜுன் நடித்திருந்தார். படத்தில் சாராவுக்கு தந்தையாக 71 வயதான மூத்த நடிகர் ராகேஷ் பேடி நடித்திருந்தார்.
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் 20 வயதான சாராவை 71 வயதான ராகேஷ் தோளில் முத்தமிட்ட வீடியோ விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து மனம் திறந்துள்ள ராகேஷ் பேடி, "சாராவுக்கு என் வயதில் பாதிதான். படத்தில் அவர் என் மகளாக நடித்தார். படப்பிடிப்பின் போது நாங்கள் சந்திக்கும் போதெல்லாம், ஒரு மகள் ஒரு தந்தையை அன்பாக அணைத்துக்கொள்வது போல அவள் என்னை வரவேற்பாள்.
எங்களுக்குள் நல்ல தந்தை-மகள் பிணைப்பு இருக்கிறது. அன்று மேடையில் நான் அதே பாசத்தைக் காட்டினேன். ஆனால் மக்கள் அதில் அன்பைக் காணவில்லை. தவறாக பார்க்கும் கண்களை நாம் என்ன செய்ய முடியும்?" என்று தெரிவித்துள்ளார்.